விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ப. சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த புகழேந்தி அண்மையில் காலமானார். புகழேந்தி காலமானதை தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளராக கௌதம் சிகாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கவுதம் சிகாமணியை நியமித்தது திமுக.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என திமுக தலைமை அறிவித்துள்ளது.