2024 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கலை, இலக்கியம், கல்வி உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவோருக்கு பத்ம விருது தரப்படுகிறது. awards.gov.in, padmaawards.gov.in இணையதளம் மூலம் தகுதி உள்ளவர் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு தபால் அல்லது நேரில் வழங்க வேண்டும். பத்ம விருதுக்கு விண்ணப்பிப்போர் ஜூன் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.