குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோர தீபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து உயிரிழந்தவரின் உடல் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு கொச்சி விமான நிலையத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அஞ்சலி செலுத்தினார். இவருடன் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங், தமிழக அமைச்சர் செந்தில் மஸ்தான் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
விமான நிலையத்தில் வாடிய முகத்துடன் உற்றார் உறவினர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் உயிரிழந்த 7தமிழர்களின் உடல்களை கொண்டு செல்ல தனித்தனியாக வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.