உலகக்கோப்பை டி20 தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது நியூசிலாந்து அணி.
2024 டி20 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக குரூப் சி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நியூசிலாந்து அணி வெளியேறியது. சி பிரிவில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி 3வது வெற்றி பதிவு செய்தது ஆப்கானிஸ்தான் அணி.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய பப்புவா நியூ கினியா அணி 19 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கான் அணியில் பரூக்கி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். நியூ கினியா அணியில் கிப்ளின் டோரிகா அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஆப்கான் அணியில் குல்பாடின் நைப் 49 ரன்கள் எடுத்தார்..
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் குழுவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நியூசிலாந்து அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றாலும் முதல் 2 இடங்களை எட்ட முடியாது. ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து 3 வெற்றிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி அடைந்துள்ளது.