ஆந்திர மாநில அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு சட்டம் -ஒழுங்கு, அமைச்சர்களுக்கு ஒதுக்காத துறைகள் கவனிப்பார். ஆந்திரா மாநிலத் துணை முதலமைச்சர் ஆக பவன் கல்யாண் அதிகார்வப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பவன் கல்யாணுக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை, சுற்றுச்சூழல் வனம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பைய்யாவுல கேஷவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிம்மலா ராமநாயுடுவுக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சந்திரபாபுவின் மகன் அமைச்சர் நாரா லோகேஷுக்கு மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் சந்திரபாபு உடன் சேர்த்து 25 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.