கோவையில் இன்று மாலை நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் கோவை சென்றடைந்துள்ளார் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, ஆகிய முப்பெரும் விழா திமுக சார்பில் இன்று நடைபெறுகிறது. இதற்காக கோவை கொடிசியாவில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.