மோடி அரசு தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசாக மாறியிருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்.டி.ஏ அரசு எத்தனை ஆண்டுகள் நீடிக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார். மேலும் 400 தொகுதிகளில் வெற்றி மோடி உத்தரவாதம் ஆகிய முழக்கங்கள் என்ன ஆனது? என கேள்வி எழுப்பிய அவர் 3 சக்கர ஆட்டோ போன்றது என்.டி.ஏ அரசு என விமர்சித்துள்ளார்.