நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் முறைகேடுகளை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு அனைத்து இந்திய மாணவர்கள் சங்கம் (AISA) அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் ஜூன்19 மற்றும் 20ம் தேதிகளில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.