2024 டி20 உலக கோப்பை தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் அதிக முறை (2) ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற இந்திய அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. முன்னதாக 2009 ஆம் ஆண்டில் நடந்த டி20 தொடரில் நியூஸிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
T20 உலகக் கோப்பை தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் விவரம் இதோ :
தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்துக்கு எதிராக (2009), நியூசிலாந்து – பாகிஸ்தானுக்கு எதிராக (2010), இந்தியா – தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (2012), இந்தியா – வங்கதேசத்துக்கு எதிராக (2016), ஜிம்பாப்வே – பாகிஸ்தானுக்கு எதிராக (2022), தென்னாபிரிக்கா – நேபாளத்துக்கு எதிராக (2024).