விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ‘மைக்’ சின்னத்தில் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தவுடன் நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும் என்று கூறிய அவர், இந்த தேர்தலுக்குப் பின் தங்களுக்கு என தனிச்சின்னம் கேட்போம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக சொல்லும் காரணங்களில் தான் உடன்படுவதாகவும் கூறியுள்ளார்.