தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.