தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத ஒரே கட்சி திமுக என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக வென்றதை குறிப்பிட்ட அவர் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் தான் இது சாத்தியமானது என விளக்கம் அளித்துள்ளார். மேலும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பிறகு பாஜகவை பற்றி முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கலாம் எனவும் அவர் காட்டமாக கூறியுள்ளார்.