டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற பெருமையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பெற்றுள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான 36-வது லீக் போட்டியில் பாபர் அசாம் 32 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் 17 இன்னிங்ஸ்களில் 549 ரன்கள் எடுத்தார். அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் : இந்திய அணியின் எம்.எஸ் தோனி (529), நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (527), இலங்கையின் ஜெயவர்த்தனே(360), தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் (352) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.