மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்த விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக கூறிய அவர், மோடி அரசின் அலட்சியம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என்றும் உறுதி தெரிவித்தார். மோடி அரசின் நிர்வாக அலட்சியமே கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துக்கள் அதிகரித்ததற்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.