இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை 601 சிக்ஸர்களை விளாசி உள்ளார். இதன் மூலம் அதிக சிக்சர் விளாசியோர் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிரிஸ் கெயில் (553 சிக்சர்), பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி (476 சிக்ஸர்கள்), நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் (398 சிக்சர்), நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் (383 சிக்சர்) ஆகியோர் 2 முதல் 5 வரையிலான இடங்களில் உள்ளனர்.