கார் விபத்தில் இருந்து குணமாகி 2024 ஐபிஎல்லில் களமிறங்கிய ரிஷப் பண்ட் கீப்பிங், பேட்டிங்கில் அசத்தினார். அதேபோல சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டார். இருப்பினும் 2 பேரும் டி20 உலக கோப்பை அணியில் சேர்க்கப்பட்டனர்.ஆனாலும் ரிஷப்மென்ட் மட்டுமே 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளார். விராட் கோலி போன்றோர் சொதப்பும் நிலையில் ரிஷப் பண்ட் தன் மீதுள்ள நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் 3 போட்டிகளில் 36, 42, 18 என 96 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி வருகிறார்.