முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “#நான்_முதல்வன் திட்டம் என்னுடைய கனவுத்திட்டம் மட்டுமல்ல; நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்! இந்தத் திட்டத்தின்கீழ் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று பயிற்சி முடித்து திரும்பிய 25 மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, அவர்களது கண்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியையும் உள்ளங்களில் நிறைந்திருந்த நம்பிக்கையையும் கண்டேன்.
அவர்களது நம்பிக்கைதான் நாளைய நம் புகழுக்கான அச்சாணி! நாடும் நாமும் பெருமையடையக் கற்போம்! கல்வியைவிடச் சிறந்த செல்வம் ஏதுமில்லை எனக் கற்பிப்போம்! கல்வியே பெருந்துணை எனத் தடைகளை உடைத்து வெற்றிநடை போடுவோம்!” என தெரிவித்துள்ளார்..