2024 டி20 உலக கோப்பை லீக் போட்டியில் சி பிரிவில் உள்ள நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் பிரையன் லாரா ஸ்டேடியத்தில் மோதியது. இந்த இரு அணிகளும் சூப்பர் 8க்கு தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், சம்பிரதாய ஆட்டமாகவே இந்த போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் வீசிய 4 ஓவர்களில் ஒரு ரன்கள் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதற்கு முன் இதுவரை யாரும் இப்படி ஒரு சாதனையை படைத்ததில்லை. டி20 வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவரில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.