சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் புறப்பட்ட நிலையில் நள்ளிரவு 11.30 மணி அளவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது ரயில் என்ஜின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபர் ஒருவரின் பிணம் சிக்கி இருந்ததை கண்ட ரயில் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனே பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்த ரயில் என்ஜின் டிரைவர் வாலிபரின் பிணம் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வாலிபரின் பிணத்தை மீட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.