தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதன்படி பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து பள்ளிகளுக்கும் கையடக்க கணினி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து வரிசை எண் கொண்ட இந்த கையடக்க கணினியை எனது பள்ளி சார்பாக (ஆசிரியர் பெயர்) என்ற பெயர் கொண்ட இடைநிலை ஆசிரியராகிய நான் பெற்றுக் கொண்டேன் என்றும் இதனை எனது பள்ளியில் பொறுப்புடன் ஒப்படைப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன் என இடைநிலை ஆசிரியர்கள் கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.