பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டது. இதனையடுத்து மறுக்கூட்டலுக்கு பலரும் விண்ணப்பித்திருந்தார்கள். இந்நிலையில் மறுகூட்டலுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று வெளியாகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.