விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். மேலும், எந்தவொரு கட்சிக்கும் ஆதரவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தான் பிரதான இலக்கு என்றும், அதில் வெற்றிபெற்று மக்கள் பணியாற்றுவோம் என்றும் அவர் அறிக்கையின் வாயிலாக கூறியிருக்கிறார்