கோவையில் பாதாள சாக்கடை குழியில் பெண் விழுந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரத்தில் மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் 13-ஆம் தேதி இளம் பெண் ஒருவர் தவறி விழுந்தார். இந்நிலையில் ஒப்பந்ததாரருக்கு ரூ 50,000 அபராதம் விதித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் காந்திபுரம் உதவி செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.