பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு மாறாக கூட்டணி வைத்து விட்டோமே என்று வருத்தப்படுவதாக தெரிவித்த அவர், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்து போட்டியிடும் என தெரிவித்தார். அதிமுகவை அதிகாரத்தைக் கொண்டு யாராலும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.