பள்ளி பெயர்களில் ஜாதி பெயர் இருந்தால் அதனை நீக்க தமிழக அரசுக்கு நீதியரசர் சந்துரு பரிந்துரைத்துள்ளார். ஆதி திராவிடர் நலன், கள்ளர் மறுவாழ்வு என்ற பெயர்களை தவிர்க்க அரசுக்கு ஒரு நபர் குழு பரிந்துரைத்துள்ளது. நன்கொடை கொடுப்பவர்களின் பெயர்களை ஜாதியுடன் பள்ளிகளில் எழுதக்கூடாது என நீதியரசர் சந்துரு தெரிவித்துள்ளார். பள்ளி பகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஜாதியை சேர்ந்தவரை கல்வி அதிகாரியாக நியமிக்க கூடாது என்றும், தனியார் பள்ளி பெயர்களில் ஜாதி பெயர் இருந்தால் அதனை நீக்க தமிழக அரசுக்கு நீதி அரசர் சந்துரு பரிந்துரைத்துள்ளார்.
ஜாதி ரீதியான பெயர்களை நீக்க தவறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே ஜாதிய உணர்வு குறித்த ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் வழங்கியது. ஜாதிய உணர்வால் ஏற்படும் வன்முறையை தவிர்ப்பது பற்றி வழிமுறைகளை வகுக்க தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டது.