தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இரவு 7:00 மணி வரையிலான அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், கரூர், தேனி, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது..