நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மருத்துவர் அபிநயா (முதுநிலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வருகின்ற 20.06.2024 வியாழக்கிழமையன்று காலை 10 மணியளவில் வேட்புமனு பதிவு செய்யவிருக்கிறார்.
விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலூர், புதுச்சேரி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தகட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் காலை 08 மணியளவில் விக்கிரவாண்டி சுங்கச்சாசடி அருகில் உள்ள திருமலை சாமி மண்டபத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.