2024 டி20 உலக கோப்பை லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக நாளை முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெற உள்ளது. குரூப் 1 பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இந்தியா ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 8ல் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.
இந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஆடுகளத்தை விட வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் சுழல் பந்துவீச்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற அவர், இதன் காரணமாக பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இனி வரும் ஆட்டங்களில் பலமான சுழல் பந்துவீச்சாளர்களை வைத்திருக்கின்ற அணியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.