மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலின் கால்களை கட்சித் தொண்டர் ஒருவர் கழுவி சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அகோலா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நானா படோல் பங்கேற்க வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோவை சுட்டிக்காட்டி காங்கிரசின் நில பிரபுத்துவ மனநிலையை கண்டிப்பதாக பாஜக தெரிவிக்கிறது.