2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அரசியலமைப்பு சட்டப்படி தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்குள் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த நிலையில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்துள்ளார் ராகுல் காந்தி.
இந்த நிலையில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்திருந்த நிலையில், அதனை ஏற்றது மக்களவை செயலகம். வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை மக்களவை செயலகம் ஏற்றுக் கொண்டது. லோக்சபா செயலகம் அவரது ராஜினாமாவை உறுதி செய்தது. கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தனது தேர்தலில் அறிமுகமாகிறார்.