மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு, ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து. ராகுல் காந்தி விடாமுயற்சியால் காங்கிரசை கட்டிக் காக்க முயற்சிக்கிறார். பாஜகவுடன் எங்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை. 2026 இல் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மை நிரூபிக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ பதிவிட்ட செல்லூர் ராஜு அதனை நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.