காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நண்பர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன் தனது பதிவில், நண்பர் திரு. அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகுல் காந்தி. நீங்கள் இரக்கத்துடனும் பெருந்தன்மையுடனும் தொடர்ந்து வழிநடத்தி, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் நம்பிக்கையான செய்தியைப் பரப்புங்கள்” என தெரிவித்தார்.