ஹரியானா மாநில எம்எல்ஏவும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான கிரன் சௌத்ரி, அவருடைய மகள் ஸ்ருதி சவுத்ரியுடன் நாம் மாநில முதல்வர் நாயப் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். அங்கு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியிலிருந்து அவர் விலகியது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்த கூடும் என கூறப்படுகிறது. கிரண் சவுத்ரி ஹரியானா முன்னாள் முதல்வர் பன்சிலாலின் மருமகளும் ஆவார்.