தமிழுலத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் ஜூன் 28ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது மாணவர்களிடம் ஆங்கில மொழியை எளிதில் கற்பிக்கும் வகையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி பள்ளிகளில் உள்ள உயர்தர கணினி ஆய்வகங்களில் நடைபெறும்.