புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கந்தர்வகோட்டை அருகே புதுநகரில் உள்ள தனியார் பள்ளியின் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வையாபுரி குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து அருகில் உள்ள பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறுகாயத்துடன் உயிர் தப்பினர்.