டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், வினோத் சவுகானின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் சிகார் சிறையில் இருந்து இருவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகினர்.