இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது தென் ஆப்பிரிக்கா அணி. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய மகளிர் அணி. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடினார். ஷபாலி வர்மா 20 மற்றும் ஹேமலதா 24 ரன்களில் அவுட் ஆகினர். பின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் ஜோடி சேர்ந்தனர். பின் மிகச் சிறப்பாக விளையாடிய மந்தனா தொடர்ந்து 2வது சதம் விளாசினார்.
ஸ்மிருதி 120 பந்துகளில் 18 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 136 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதேபோல கேப்டன் ஹர்மன் பிரீத் கவுரும் சதம் அடித்தார். ஹர்மன் ப்ரீத் ஆட்டமிழக்காமல் 88 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார். கடைசியில் ரிச்சா கோஷ் 13 பந்துகளில் 25 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது.