காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடினார். ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் அக்கட்சியினர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் டெல்லியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இளைஞர் காங்கிரசார் ஏர்கூலர் வழங்கினர். டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியினரின் இந்த நலத்திட்ட உதவி கவனம் ஈர்த்துள்ளது.