கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் என்பவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படுபவர்களில் ஏற்கனவே 4 பேர் பலியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 40 பேர் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் உடல் நலக் குறைவு ஏற்பட்ட 10 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.