14 வகை பயிர்களுக்கான கொள்முதல் விலையை அறிவித்தது மத்திய அரசு. நெல் கொள்முதல் விலை ₹ 117 ஆக அதிகரிக்க டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு குவிண்டாலுக்கு நெல் ₹2,300 என கொள்முதல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 117 உயர்த்தி ரூபாய் 2,300 ஆக அறிவித்தது. சிறுதானியங்கள், பருப்பு வகைகள் பருத்தி உள்ளிட்டவற்றுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உளுந்துக்கான கொள்முதல் விலை ₹7,400, சிறுதானியங்கள், பருப்பு, பருத்தி கொள்முதல் விலையையும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு.