கன்னட சின்னத்திரை நடிகை வைஷ்ணவி கவுடா முகத்தை பயன்படுத்தி டீப் பேக் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான அவருடைய புகைப்படங்களை மர்ம நபர்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். அவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவி இது குறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.