பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தாள் பறிபோனதற்கு பிறகும் கூட முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும். மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 ஆம் தேஹ்டி பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பதிவிட்டுள்ளார்.