கன்னட நடிகர் தர்ஷனின் காதலியும், நடிகையுமான பவித்ரா கவுடாவின் ரசிகர் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் தொடர்பான பரபரப்பு தகவல்களை போலீசார் அம்பலப்படுத்தி வருகின்றனர். கொலைக்குப் பிறகு தர்ஷன், ரேணுகாசாமியின் உடலை விட்டுவிட்டு, கடந்த 9ஆம் தேதி அதிகாலை ஹோஸ்கேரஹள்ளியில் உள்ள தர்ஷனின் மனைவி விஜயலட்சுமியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தார்.
அங்கிருந்து மைசூர் செல்லும் முன்பாக வீட்டில் பூஜை செய்தார். இந்நிலையில், காவல்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்பி புதன்கிழமை 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.