கோடையில் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
கோடைக்கால உணவுகள்
ஆண்டுதோறும் கோடைக்காலத்தின் வெப்பம் உலகளாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கோடை வெயில் தாங்கமுடியாத அளவுக்கு தகிக்கிறது. இந்த கோடை உஷ்ணத்தினால் உடலில் பல்வேறு நோய்த் தொற்றுகளும் உபாதைகளும் ஏற்படுகின்றன. மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க சிலவகை பழங்கள் நமக்கு இயற்கையிலேயே கைகொடுக்கின்றன. அவற்றப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்
கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கும் பனநுங்குகள் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரக்கூடியதாகும். இதில் உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரதம், தாதுக்கள், நார்ச்சத்து, சர்க்கரையளவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் மட்டுமே கிடைக்கும் நுங்கை தினந்தோறும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடலாம்.கல்நுங்கு சாப்பிட்டால் வயிறு வலி வரும். ஒன்று அல்லது இரண்டு கல்நுங்குகளை பெரியவர்கள் சாப்பிடலாம். முதியவர்களோ குழந்தைகளோ சாப்பிடக்கூடாது.
கோடைக்காலத்தில் தினமும் பழங்கள் நிறைந்த உணவை உட்கொள்வது ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த உதவும். பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான நிறத்துக்கு பங்களிக்கும் சில கோடைகால பழங்களைப் பாருங்கள்
தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடெண்ட்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது, இது உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவும். இந்தப் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரிகள், ப்ளாக்பெர்ரிகள் போன்ற பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடெண்ட்கள், வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், இளமையாக இருக்கவும் உதவும். இந்த ஜூசி பெர்ரி உங்கள் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.