கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இவ்வளவு பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதற்கு பின்னால் மிகப்பெரிய அதிகாரமிக்கவர்கள் உள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷச் சாராயம் விற்பனையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளார்.