செல்போன் பேட்டரி வெடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. அதனை தவிர்க்க சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் போதே, செல்போன்-ஐ உபயோகப்படுத்தக் கூடாது. பவர் பேங்க் சாதனங்களையும் கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பவர் பேங்க் பயன்படுத்த வேண்டும். வழக்கமான நேரத்தை விட விரைவாக சார்ஜ் ஏறுவதும், இறங்குவதும், பேட்டரியில் சிக்கல் இருப்பதற்கான அறிகுறிகள். 20 சதவீதத்திற்கும் கீழாக சார்ஜ் குறைந்தால் மட்டுமே, மீண்டும் சார்ஜ் ஏற்ற வேண்டும். போன் வெப்பமானால், இன்டர்னல் ஸ்டோரேஜ் கிளின் செய்ய வேண்டும்.