கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் கள்ளக்குறிச்சியில் உயிரிழப்புக்கான காரணமான மெத்தனால் எங்கிருந்து கிடைத்தது என்று கண்டுபிடிக்க போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மெத்தனால் இருப்பை முழுமையாக கண்டறிந்து அதனை முற்றிலுமாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யும் படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர்.