தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவராக எஸ்.மணி குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான மணி குமார் தமிழக மாநில மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மணி குமாரை மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். 3 ஆண்டுகளோ அல்லது 70 வயது வரையிலோ மணி குமார் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவியில் நீடிப்பார்.