கள்ளச்சாராயம் குடித்ததால் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்ற கோவிந்தராஜன் என்ற கண்ணுகுட்டி, அவரது மனைவி விஜயா, அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவர் மீதும் மரணத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டது, ஆரோக்கியமற்ற போதை பொருட்களை விற்றது என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் புகைப்படத்தை தற்போது காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.