கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. பின்னர் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.